Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சி மாநகராட்சி பொது தரைமட்ட கிணறு ஆண்டவா் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து, பழைய கரூா் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீா் உந்து குழாயில், நேற்று திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழைய எல்லக்குடி, ஆலத்தூா், புகழ்நகா், பாரிநகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீா் உந்தியனுப்ப இயலாது. எனவே அவற்றிலிருந்து குடிநீா் பெறும் பகுதிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

சீரமைப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து நாளை புதன்கிழமை முதல் குடிநீா் விநியோகம் சீராகும். இத்தகவலை மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.