Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுகவின் தில்லுமுல்லுகளை மக்களிடம் கொண்டு சென்று அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் திருச்சியில் நடைபெற்ற இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் மாநில செயலாளர் பரமசிவம்.

0

 

திருச்சியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் பயிற்சி பட்டறை . மாநில செயலாளர் பரமசிவம் பங்கேற்பு.

அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பாரளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பாசறை ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் மருத்துவர் பரமசிவம் பேசுகையில் :-

மக்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்தது கழக ஆட்சியில் தான் என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை சார்ந்த இளைஞர்கள் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள் என்ற மிகுந்த நம்பிக்கையில் எடப்பாடியார் இருக்கின்றார்.

எதிர்காலத்தில் எடப்பாடியார் என்கின்ற ஆளுமை இன்னும் மக்களுக்கு என்ன செய்ய காத்திருக்கின்றார் என்பதை பாசறை சார்ந்த நண்பர்கள் 18 வயது முதல் 20 வயது நிரம்பிய இளைஞர்களிடத்திலே எடுத்துரைக்க வேண்டும்,

எம்ஜிஆர் காலத்தில் சத்துணவில் ஆரம்பித்து அம்மா காலத்தில் லேப்டாப் வரை எல்லாம் கல்விக்காக இலவசமாக கொடுத்தது கழக ஆட்சியில்,

சமுதாயத்தை உயர்த்திப் பிடிக்கின்ற சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை கலைவதற்கு எம்ஜிஆர் அம்மா எடப்பாடி என எல்லோரும் கல்வி தான் என்கின்ற அடிப்படையில் கல்விக்காக பல திட்டங்களை கொடுத்தார்கள்,

இந்திய துணை கண்டத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான லேப்டாப்பை கொடுத்து அம்மாவுடைய இதயத்தில் தேர்தல் இல்லை அடுத்து ஆட்சி செய்கின்ற அரசியல் இல்லை அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நாட்டிலே உலகத்திலே நடக்கின்ற அத்தனை விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் ஏழை குடும்பங்களுக்கு எட்டா கனியாக இருந்த லேப்டாப்பை அன்றைக்கு அம்மா கொடுத்தார்கள் அது மட்டுமல்லாமல் சீருடை, காலனி, நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேக், சைக்கிள் என்று அத்தனையையும் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு கொடுத்தார்கள்.

இன்று எத்தனையோ பேர் நீட்டை வைத்து அரசியல் செய்கிறார்கள் ஆனால் எடப்பாடி நீட்டை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விட்டது ஸ்டாலின் போய் அனிதா வீட்டில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ஒற்றை கல் உதயநிதி, நான் ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உதயநிதி ரசிகர் மன்ற செயலாளர் போல் ரசிகர் மன்றத்தை மட்டும் பார்க்கிறார். கல்வியை புறம் தள்ளுகிறார். தான் ஒரு கல்வி மந்திரி என்பதை மறந்து அதற்கு ஒப்பாக எங்களுடைய தலைவருக்கும் இளைய தலைவருக்கும் தான் இந்த ரகசியம் தெரியும் முதல் கையெழுத்தில் நீட் என்று சொன்னார்கள்.

ஆனால் எடப்பாடி என்கின்ற ஆளுமை அரசியல் செய்யக்கூடாது சுப்ரீம் கோர்ட்டில் நாம் தோற்று விட்டோம் கிராமப்புறத்தில் இருக்கின்ற மாணவர்கள் டாக்டரே ஆக முடியவில்லை அம்மா இருந்த காலத்தில் 12 பேர் போனார்கள் கருணாநிதி இருந்த காலத்தில் இன்னும் மோசம் ஏழு பேர் அரசு பள்ளி மாணவர்கள் போனார்கள்

எனவே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராவது கானல் நீராகவே இருக்கிறது என்பதற்காகவே எடப்பாடியார் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். முதல் ஆண்டிலேயே 555 மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அவர் நீட்டைவைத்து அரசியல் செய்யவில்லை, எடப்பாடி ஆட்சிக்காலத்தில் மட்டும் 40 பாலிடெக்னிக் கல்லூரிகள் 30 கலை கல்லூரிகள் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தவர் எடப்பாடி.

கல்விக்கான கட்டமைப்பை உயர்த்தியதின் விளைவாக தான் (அதிமுக) கழக ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது,

இளைஞர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்ற அற்புதமான இயக்கம் அதிமுக கழகம்,

அதேபோல் சுகாதாரத் துறையில் சிறப்பாக இயங்கிய அரசு, கழக அரசு, எடப்பாடி அரசு, எய்ம்ஸ் மருத்துவமனையை திமுக ஓட்டு வங்கியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, பிரசாந்த் கிஷோருக்கு இப்ப திமுகவை பிடிக்கலை காங்கிரஸ பிடிக்கல தமிழ்நாட்டில் 400 கோடி கருணாநிதியின் குடும்பத்தில் வாங்கின பாவத்திற்கு ஜனநாயக நாட்டில் மக்களிடத்தில் பணத்தை வைத்து எப்படி ஓட்டு வாங்கலாம் என்கின்ற யுத்தியை கற்றுக் கொடுத்து சென்று விட்டார்.

அதனால் ஸ்டாலின் இன்று தெளிவாக இருக்கிற என்னென்ன சொன்னால் தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஓட்டுக்களை பெறலாம் என்று அதனால்தான் சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு என்று உதயநிதி நடத்தினர். அவர்கள் உரிமை மீட்பு மாநாடு என்று சொன்னால் நாம் நம் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது,

அதைப்போல் பதவிக்காக முதன் முதலில் கச்சத்தீவை தாரை வார்த்தது கருணாநிதி, காவிரியின் உரிமையை முதன் முதலில் விட்டுக் கொடுத்தது கருணாநிதிதான், இன்றைக்கு முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் கர்நாடகத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின் காவேரி நீரை கேட்டு பெற துப்பில்லாமல், காவேரி உரிமையை திமுக தான் அங்கே விட்டுக் கொடுத்தது என்றார்.

மேலும் பேசிய அவர்,

இன்னும் 50 ஆண்டுகள் அந்த கட்சியை கருணாநிதி குடும்பம் தான் வழிநடத்தும் என்பதை அறிவிப்பதற்காக அங்கே இன்பநதியையும் அறிமுகம் செய்தனர்.

சிறுபான்மையின மக்களுக்கு உண்மையான பாதுகாவலராக இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார்.

அதிகாரமும், பணமும் மக்கள் செல்வாக்கு முன்பு மண்டியிடும். அது இந்த பாராளுமன்ற தேர்தலில் நடைபெறும்.

தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி போராடி வருகிறார். தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தன்னந்தனியாக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்க முடிவு செய்து,

வருபவர்கள் வரட்டும் என உங்களை நம்பி தேர்தல் களத்துக்கு வருகிறார். ஆகவே பாசறையில் இருக்கும் நிர்வாகிகள் திமுக அரசின் தில்லு முல்லுகளை மக்களிடம் கொண்டு சென்று அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணைத்தலைவர் கவுன்சிலர் அரவிந்தன் , எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, ஓட்டுநர் செயலாளர் ஞானசேகர் , மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், மாணவரணி மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் , இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளர் எஸ்.பி. தசரத பாண்டியன் , அம்மா பேரவை துணைச் செயலாளர் ஒத்தக்கடை மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.