Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் தொலைந்த 127 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார் போலீஸ் கமிஷனர் காமினி

0

 

திருச்சி போலீஸ் கமிஷனர் மாநகரில்
காணாமல் போன 127 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்’

திருச்சி மாநகரில் பல சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார்கள் அளித்தனர்.

அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவிட்டதன் பேரில், போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் பயனாக கண்டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்த 69 செல்போன்களும், காந்தி மார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்த போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரகத்தில் 21 செல்போன்களும், கே.கே.நகர் சரகத்தில் 11 செல்போன்களும், பொன்மலை சரகத்தில் 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 10 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 153 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

 

அவற்றில் 127 செல்போன்களை இன்று(31-01-2024) திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர கமிஷனர் காமினி ஒப்படைத்தார்.

அப்போது காவல் துணை ஆணையர்கள் அன்பு, செல்வகுமார் மற்றும் உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.