Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலைப்பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி பள்ளியில் இலவச தையல் பயிற்சி சான்றிதழ்களை கவுன்சிலர் ரமேஷ் வழங்கினார்

0

'- Advertisement -

 

Ad banner

இலவச தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் நர்சரி பள்ளியில் பொன்மலைப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மகளிர்களுக்கு கான்கார்டு நிறுவனம் சார்பாக இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

பயிற்சியின் நிறைவு நாளான இன்று பயிற்சி பெற்ற மகளிர்கள் அனைவருக்கும் செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் திருச்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் செயின்ட் மேரீஸ் பள்ளி ஆசிரியை சர்மிளா அவர்கள் அனைவரையும் வரவேற்க சிறப்பு விருந்தினர்களான கொட்டப்பட்டு குமார். பள்ளி நிர்வாகி எட்வின் பால்ராஜ் அவர்களின் மனைவி ராணி , பள்ளி முதல்வர் மரியா அப்சரா ஆகியோருக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசினை பயிற்சி நிர்வாகி ஜெய முருகன் அவர்களால் வழங்கப்பட்டது.


விழாவில் இலவச தையல் பயிற்சி பெற்ற அனைத்து மகளிரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் ஆசிரியை லதா நன்றி கூற தேசிய கீதத்தடன் விழா இனிதே நிறைவுற்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.