Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் கஞ்சா அடிப்பதை தட்டி கேட்டவரை உருட்டு கட்டையால் தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு.

0

'- Advertisement -

 

Ad banner

கஞ்சா அடிப்பதை தட்டி கேட்டவரை உருட்டு கட்டையால் தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு.

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்
(வயது 35) பெயிண்டர்.
இவரது வீட்டு அருகாமையில் கிறிஸ்தோபர் என்ற வாலிபர் கஞ்சா புகைத்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைப் பார்த்த கேசவன் அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்தோபர் தனது நண்பர்கள் சாரதி, மணி, பாரதி, மணிகண்டன், ஆதி கார்த்தி, ஹரி அழைத்து வந்து அவரை மரக்கட்டையால் தாக்கி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கேசவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கிறிஸ்டோபர் உள்பட 6 பேர் மீது பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.