Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:சாலை விபத்தில் முன்னாள் ரேஷன் கடை ஊழியர் பலி. மனைவி கவலைக்கிடம் .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் பரிதாபச்சாவு.
மனைவி கவலைக்கிடம்.

TVK ad

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கிழவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்தாஸ் (வயது 62). ஒய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர். இவரது மனைவி ஆக்னஸ்மேரி (47). இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் துப்புறவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் அரியமங்கலம் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். காவிரிப்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த திருச்சி மாநகர காவல்துறை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஸ்டீபன்தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆக்னஸ்மேரி ஆபத்தான நிலையில் சிகிசை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.