Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது குறித்து ஆலோசனை.

0

'- Advertisement -

 

Ad banner

விலைவாசி உயர்வை கண்டித்து

அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள்

TVK ad

திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக ஆட்சியில் விஷம் போல் ஏறிவரும் கடுமையான விலைவாசி உயர்வு, அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் விரோத போக்கு, பெருகிவரும் கள்ளச்சாராயம், கஞ்சாபோதை பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை கண்டன தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன் ,
டி.என். சிவகுமார் ,
அசோகன், பொன்னி சேகர், பிச்சப்பிள்ளை ,ஜேக்கப் பொதுக்குழு உறுப்பினர் விஜயா, ,ஐ டி.விங் சுரேஷ், தர்மதுரை, தாமஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.