Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 5 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனை சென்ற தாய் திடீர் மாயம்.

0

'- Advertisement -

 

Ad banner

கைக் குழந்தையுடன் சென்ற இளம் பெண் மாயம்.

TVK ad

திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 ) இவருடைய மனைவி பர்வீன் பானு (வயது 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய ஐந்து மாத குழந்தை உமைராவை கூட்டிக்கொண்டு தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது கணவர் ரஹ்மத்துல்லாஹ் தில்லைநகர் காவல் நிலையத்தில் தனது மனைவியும், தனது 5 மாத குழந்தையும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தில்லைநகர் காவல் ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.