Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திய 3 சிறார்கள் மீது 5 பிரிவில் வழக்கு .

0

 

திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 சிறார்கள் தற்கொலை முயற்சி.

குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், திருச்சி கீழபுலிவார்டில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் தற்பொழுது 11 சிறார்கள் உள்ளனர். மதுரை இளைஞர் நீதிக்குழுத்தின் ஆணையின்படி 3 பேரும் திருச்சி கூர் நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் கூர்நோக்கு இல்லத்தின் முதல் தளத்தில் அறையில் இருந்து வந்த நிலையில், அவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து கூர் நோக்கு இல்லத்தில் தப்பி செல்லும் நோக்கத்தில், கடந்த 24 ம் தேதியன்று சுமார் 3 லட்சம் மதிப்புள்ள மின் விசிறிகள், மின் விளக்குகள், தொலைகாட்சி பெட்டிகள், குளியலறை கதவுகள், கழிவறை மற்றும் கப்போர்ட்டு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

அப்போது பணியில் இருந்த சமையலர் கேசவன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் மூவரும் தாங்களாகவே உடைத்த டியூப் லைட் கண்ணாடி துண்டுகளைக் கொண்டு தங்களது உடல்களை கிழித்து காயப்படுத்தி கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294, ஆபாசமாக பேசுதல் 352, ஆத்திரமூட்டி தாக்குதல் 353, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு அவர்கள் மூவரும் மீண்டும் மதுரை கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.