Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஐயப்பன் கோயில் 45 ஆம் ஆண்டு ஆராட்டு விழா. வரும் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி அருகே பெல் நகரியம் கைலாசபுரம் குடியிருப்புப் பகுதியில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆராட்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 45- ஆவது ஆண்டாக ஆராட்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.

TVK ad

தொடா்ந்து, குத்துவிளக்குகள் வைத்து, 1,000 கிலோ எடையிலான உதிரி பூக்களால் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இதையடுத்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆராட்டு விழா ஜன. 2 ஆம் தேதி வரை நடைபெறும் என விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஐயப்ப பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.