Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெள்ளிக்கிழமை மத்திய வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் அறிக்கை .

0

'- Advertisement -

வெள்ளிக்கிழமை
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

Ad banner

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

TVK ad

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையிலும் நடைபெறவிருக்கின்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,

 

மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.