Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர். நடத்துனர் பணிகளுக்கு திருச்சியில் இன்று எழுத்து தேர்வு.

0

'- Advertisement -

 

Ad banner

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வை திருச்சியில் 1,172 பேர் எழுத உள்ளனா்.

TVK ad

இந்தத் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் நடத்துகிறது.

திருச்சியில் இந்த தேர்வு திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான பாரதிதாசன் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த மையத்தில் 1,172 போ பங்கேற்று தேர்வெழுத உள்ளனா்.

தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் புல முதல்வா் த. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.