தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ளது கண்ணாடி குளம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் வேலுச்சாமி (வயது 32) இவரது மனைவி பெயர் இசக்கியம்மாள் (வயது 28)
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.. இதற்கு குறுக்கே வந்துள்ளார் முருகன் (வயது 41) இசக்கியம்மாளுக்கும் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியும் விட்டது. இந்த விஷயம் வேலுச்சாமிக்கு தெரியவந்துள்ளது.. ஆனால், இசக்கியம்மாள் எதையுமே காதில் வாங்கவில்லை.. தொடர்ந்து முருகனுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில், இது தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனையும் வெடித்தது.. நாளுக்கு நாள் சண்டை அதிகமானாலும்கூட, கள்ளக்காதலையும் முருகனையும் கைவிட தயாரில்லை என்று இசக்கியம்மாள் கறாராக சொல்லிவிட்டதாக தெரிகிறது. அத்துடன், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கும் கிளம்பி சென்று விட்டார். சொந்த ஊருக்கு சென்றும் இந்த கள்ளக்காதல் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த வேலுச்சாமி, மனைவியிடம் இதை பற்றி பேசுவதைவிட முருகனிடம் சொல்லி எச்சரிக்கலாம் என்று முடிவு செய்து கிளம்பினார்.
சம்பவத்தன்று, கண்ணாடிகுளம் கிராமத்தில் இருந்து ருக்குமணியம்மாள்புரம் செல்லும் சாலையில், முருகன் மாடு மேய்த்து கொண்டிருந்தாராம் அப்போது அவரிடம் வேலுச்சாமி, “என் மனைவி இசக்கியம்மாளுடன் பழகுவதை நிறுத்தி கொள் என்று சொல்லி கண்டித்ததாக தெரிகிறது.. கள்ளக்காதலை கைவிட முருகனும் மறுத்துள்ளார்.
இதுவே இவர்களுக்கு இடையே வாக்குவாதமாக வெடித்தது.. வாக்குவாதம் முற்றவும், மறைத்து வைத்திருந்த இளநீர்வெட்டும் அரிவாளை எடுத்து, முருகனின் தலையை வெட்டிவிட்டார் வேலுச்சாமி.. இதில் முருகனின் தலை துண்டாக போய் விழுந்தது. உடனே அந்த தலையை எடுத்து, தன்னுடைய பைக்கில் வைத்து கொண்டு, அங்கிருந்து மாமியார் ஊருக்கு கிளம்பி வந்தார் வேலுச்சாமி..
நேராக மனைவியிடம் சென்று, “இங்க பாரு, உன் கள்ளக்காதலன் தலையை கொண்டு வந்திருக்கேன் பாரு” என்று சொல்லி முருகனின் தலையை எடுத்து காட்டி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் அலறி துடித்தார்..
பிறகு அங்கிருப்பவர்கள் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து வேலுச்சாமியை கைது செய்தனர்.. அந்த தலையையும், கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலுச்சாமி மீது 294(b),302,506 (ii),ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாக்களில் ஆடை அறுப்பது போல, ஒரே வெட்டாக முருகன் தலையை வெட்டினாராம் வேலுச்சாமி.. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.