Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்:இந்திய அணிக்கு புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.

0

இந்தியா-அயர்லாந்து டி20 தொடர் ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் இருப்பதால், அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து இந்தியாவின் மூத்த வீரர்கள் மற்றும் மூத்த பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

11 மாதங்களுக்குப் பின் காயத்திலிருந்து மீண்ட பும்ரா
இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக இந்திய ஏ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த சிதன்ஷு கோடக் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 22ம் தேதியும் நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்தும் டப்ளினில் உள்ள மலாஹிட் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான டி20 தொடர் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இளம் வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்து, ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டன் பதவியை பெற்றுள்ளார். மேலும் கிருஷ்ணா மற்றும் சிவம் துபே மீண்டும் அணிக்கு வந்துள்ளனர். ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்ந்தெடுப்பதற்கு இது உதவும் என்று விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. பும்ரா தலைமையிலான இந்திய இளம் படை தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய டி20 அணி :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான், பிரசீத் கிருஷ்ணா.

Leave A Reply

Your email address will not be published.