Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிவன் பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா?தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் சர்ச்சை பேச்சு.

0

 

வடமாநிலத்தில் விநாயகருக்கு பின் சிவன் – பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா?’ என, தர்மபுரி, தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தனியார் ‘டிவி’க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.இந்நிலையில், அவர் பொது சிவில் சட்டம் குறித்து சமீபத்தில் தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்தார்.

இதில், ‘வட மாநிலத்தில் சிவன் – பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது.
முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் – பார்வதிக்கு, குடும்ப கட்டுப்பாடு நடந்ததா என தெரியவில்லை’ என, குறிப்பிட்டது, மக்களிடை‍யே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் நேரத்தின் போது மட்டும், தி.மு.க.,வினர் தாங்கள் ஹிந்துகளுக்கு எதிரி இல்லை என, இரட்டை வேடம் போடுவதாக, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”பொது சிவில் சட்டம் குறித்து, தனியார் டிவி.,யில் என்னிடம் கேள்வி கேட்ட போது, பொது சிவில் சட்டத்தில், பா.ஜ., முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும். வட மாநிலத்தில், சிவன் – பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துவர் என்பதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன். எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை,” என்றார்.

தர்மபுரி மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது:
தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தேர்தல் நேரத்தின் போது, தான் ஹிந்து என்றும், வன்னியர் என்றும் மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின், ஹிந்து மத வழிபாட்டுக்கு எதிராகவும், ஹிந்து கடவுளுக்கு எதிராகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து, தன் அறியாமையால், சிவன் – பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தனரா என, ஹிந்து மக்கள் மனம் வேதனைப்படும் படி பேசியுள்ளார். இதேபோல பிற மத கடவுள்கள் பற்றி பேச முடியுமா?தன்னை தேர்ந்தெடுத்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல், மத்திய பா.ஜ., அரசு செய்யும் நலத்திட்டங்களுக்கு, தன் பெயரை விளம்பரப்படுத்தும் அவர், ஹிந்து கடவுள்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.