Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: புற்றுநோய் தீராத கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

மணச்சநல்லூர் அருகே
புற்றுநோய் தீராத கொடுமையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பாஞ்சலி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் நோயின் பிடியிலிருந்து மீள இயலவில்லை.
இதனால் மிகுந்த மன வேதனைக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளான முருகேசன் திருப்பாஞ்சலி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள புளிய மரத்தில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி சுமதி மணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.