Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலை குடிபோதையில் தட்டி கேட்ட கணவனை கொன்று எரிக்க எடுத்து சென்ற மனைவி மற்றும் 2 பேர் கைது.

0

'- Advertisement -

 

Ad banner

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால், வெங்காய வியாபாரியை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வாசன் வேலியைச் சேர்ந்தவர் சிவலிங்கம், (வயது 40), ஆம்னி வேனில் வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.இவரது மனைவி தனலட்சுமி, (வயது 36). ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தனலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி, மதுரையில் கணவர், குழந்தை உள்ளனர். அவர்களை பிரிந்து தான் சிவலிங்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். சிவலிங்கத்துடன், கருமண்டபத்தைச் சேர்ந்த செந்தில்குமார், (40) வெங்காய வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கும், தனலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இது தெரிந்து, ஆத்திரமடைந்த சிவலிங்கம் தினமும் குடிபோதையில் தகராறு செய்து, மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, தனலட்சுமி, தன் அண்ணன் முறை உறவினரான கருமண்டபத்தைச் சேர்ந்த ஆறுமுகம், (55,)அவரது மனைவி சுமதி, (42), ஆகியோரிடம் கூறினார். இதையடுத்து, செந்தில்குமார், ஆறுமுகம், சுமதி ஆகியோர் நேற்று காலை சிவலிங்கத்தை வீட்டில் வைத்து, இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தனர்.அவரது உடலை சாக்கில் கட்டி, ஆம்னி வேனில் நேற்று மாலை 4 மணி அளவில் எடுத்துச் சென்ற போது, ராம்ஜிநகர் ரோந்து போலீஸ் விஜயபாஸ்கரிடம் சிக்கினர்.

செந்தில்குமார் தப்பியோட, மற்ற மூவரும் பிடிபட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.