Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.

0

 

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் மற்றும் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகமும் மக்கள் தொகை தகவல்கள் மிக நுண்ணிய அளவில் ஆராய்ச்சி செய்வதற்காக ‘மக்கள் தொகை தகவல்களை உயர்தொழில் நுட்ப ஆய்வு கணிணி’ மூலம் ஆய்வு செய்வதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மக்கள் தொகை கணக்கெடு;ப்பு இயக்குநரகம், சென்னை சார்பில் இயக்குநர் சஜன்சிங் ஆர்.சவான், இணை இயக்குநர் வி.கே. சுபா, திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் சார்பில் இயக்குநர் முனைவர் ஜி. அகிலா அவர்களும் கையெழுத்திட, புரிந்துணர்வ ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை முனைவர் சங்கரநாரயணன், கணிப்பொறி உதவிக் குழுமத்தின் தலைவர் முனைவர் சிவக்குமரன், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை துணை முன்னவர் முனைவர் ஆனந்த் அவர்கள், மற்றும் திட்டத்தின் தொடர்பு அதிகாரி திரு. பைசல் அஹமது கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்பக் கழகம் முதன்முறையாக நாட்டிலுள்ள 31 தேசிய தொழில் நுட்பக் கழகங்களுக்கு முன்னோடியாக ஒரு மக்கள் தொகை நுண்ணிய தகவல்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு பாதுகாப்பான தனிபட்ட தளத்தை உருவாக்கியுள்ளது, இது மக்கள் தொகை பற்றிய ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் இத்தளம் ஒரு வரப் பிரசாதமாகும். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக தலைமை மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அலுவலகம் நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி அமைப்புகளுக்கு மக்கள் தொகை உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக பிரத்யோகமாக ‘உயர் தொழில் நுட்ப ஆய்வு கணிணி’ தனித்தனியாக வழங்க உள்ளார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை அளித்து சமூக, பொருளாதார ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகள் திட்டமிடுபவர்களுக்குத் தேவையான அளிக்கவும் மற்றும் சரியான திட்டமிடுதலுக்கு வழிகோலாக அமையும் படி ஆராய்ச்சிகள் அமையும்.

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்பக் கழகம் தன்னுடைய உயர்தொழில் நுட்ப ஆய்வு கணிணி துணையுடன் கூடிய ஆய்வு மூலமாக நுண்ணிய தகவல்களில் உள்ள பலம் மற்றும் பலவீனமாக பகுதிகள் என்ன, மக்கள் தொகை கணக்கெடுப்பை மேலும் மெருகேற்றக் கூடிய வகையில் மென்பொருள் தயாரித்து வழங்குவது. ஆராய்ச்சிக்கான மென்பொருள், இயங்கு தளம், புள்ளியியல் மென்பொருள் ஆகிய வசதிகள் மக்கள் தொகை 2001 முதல் மக்கள் தொகை 2021 உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு முன்னோடியாக ஆராய்ச்சியாளர்களுக்கு வரப் பிரசாதமாகவும், ஆராய்ச்சி முடிவுகள் திட்டமிடுபவர்களுக்கு சரியான திட்டங்களை அளிப்பதற்கு ஒரு கருவியாக செயல்படும்.

Leave A Reply

Your email address will not be published.