எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் 69 கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு லால்குடி ரவுண்டானாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் 69 கிலோ கேக் வெட்டி ஏழைப் பெண்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை
லால்குடி
முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.எஸ்.விக்னேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
இவ்விழாவில்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். பாலன்,மாவட்ட கழக அவைத் தலைவர்அருணகிரி, லால்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அசோகன், முன்னாள் அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர், பூவாளூர் பேரூர் கழக செயலாளர் ஜெயசீலன், மாவட்ட பாசறை செயலாளர் அருண் நேரு, வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜ மணிகண்டன். மகளிர் அணி செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ் ,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விஜயா , முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ், குணசீலன், மாரிஸ் ஜி கே ரகுநாத்பாபு, லால்குடி துரை, பிரதீப் TNSTC ரவிச்சந்திரன், எஸ் எம் பி பிரவீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் ஜெயசீலன், டி எஸ் பிரசன்னா,கோதை. சரவணன் மற்றும் கழக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்