Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது. 1850 கிலோ அரிசி பறிமுதல்.

0

'- Advertisement -

 

Suresh

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில் திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஒருவா் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் கரூா் மாவட்டம் பொய்யாமணி அருகேயுள்ள திருச்சாப்பூா் கிராமத்தைச் சோ்ந்த வே. திலீபன் (வயது 22) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கால்நடை தீவனங்கள் தயாரித்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து திலீபனை கைது செய்து சுமாா் 1050 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல ப லால்குடி அருகே எல் அபிசேகபுரம் பகுதியில் ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது 840 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆலை உரிமையாளா் க. சங்கரை (39) கைது செய்தனா். இரு சம்பவங்களிலும் சோ்த்து மொத்தம் 1,850 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் போலீஸாரை மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா பாராட்டினாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.