Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:தேர்வு காலத்தில் மன அழுத்தம், பதட்டத்தை தடுக்க உதவும் தியானப்பயிற்சி.

0

 

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி.

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி குறித்த சிறப்பு பயிற்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
தேர்வுக் காலத்தில் மன அழுத்தமும், பதட்டமும் பொதுவான உணர்வுகளாக இருந்தாலும், தேவையான யோகா தியான பயிற்சி மூலம் மனதை ஒருமுகப்படுத்தலாம்.
தேர்வு பருவத்தில் , பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் போராடுகிறார்கள் . இது மாணவர்களின் படிப்பிலும் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தேர்வு காலங்களில் மன அழுத்தமும் பதட்டமும் பொதுவான உணர்வுகளாக இருந்தாலும், அவை அதிகமாக இருப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

வழக்கமான உறக்க நேரத்திற்கு இடையூறு ஏற்படும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். இரவு நேர உறக்கம் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.சமச்சீரான உடற்பயிற்சியுடன்,
சரிவிகித உணவை உட்கொள்வது உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான திறவுகோலாகும். சமச்சீர் உணவில் அனைத்து வகையான உணவுகளும் அடங்கும், குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பருப்புகள் மற்றும் விதைகள் ஆகும். வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு விதமான தானியங்கள், ஏழு விதமான காய்கறிகள், ஏழு விதமான பழங்கள், ஏழு விதமான கீரை வகைகளை உட்கொள்வது சிறந்த வழிமுறையாகும்.

மன அழுத்தத்தைத் தணிக்க மற்றொரு நல்ல வழி காலை அல்லது மாலையில் ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்..
உடல் அளவிலும் உள அளவிலும்
புத்துணர்ச்சி பெற
மனப்பூர்வமாக முயற்சி செய்யுங்கள், மன அழுத்தத்தைத் தணிக்க சிறிது நேரம் யோகா, தியான பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் படிக்கச் செல்லும்போது, ​​நிதானமாகவும், தெளிவாகவும் உணர தியானம் உதவும்.
உடற்பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன மற்றும் தசை தளர்வுக்கு உதவுகின்றன. மன அமைதிக்கு இசையைக் கேட்கலாம்.
கற்றல் நுட்பங்களையும் மேற்கொண்டால் படிக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கி விடலாம். இவை நினைவாற்றலை மேம்படுத்துகிறது என்றார்.

பள்ளி ஆசிரியர் லாரன்ஸ் அமலின் சவுரி ராஜ் வரவேற்று,
நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.