Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கேட்டரிங் உரிமையாளரை தாக்கி நகை பறித்த தாய் மகன் கைது.

0

 

ஆர்டர் தருவதாக வீட்டுக்கு அழைத்து
கேட்டரிங் உரிமையாளரை தாக்கி 7பவுன் நகை பறிப்பு
தாய் -மகன் கைது.

சென்னையை  சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 51 )இவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார. இந்த நிலையில் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த
பழனி மனைவி கவிதா (வயது 37), அவரது மகன் பாலாஜி(வயது 22) ஆகியோர் கேட்டரிங் ஆர்டர் தருவதாக மணிவண்ணனிடம் தொலைபேசியில் கூறினர். பின்னர் அவர் கவிதா வீட்டுக்கு ஆர்டருக்காக வந்தார்.
அப்போது கவிதாவும் அவரது மகன் பாலாஜியும் மணிவண்ணன் இடம் ரூ.5000 கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாயும் மகனும் மணிவண்ணனை ஒரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டதாக கூறப்படுகிறது.

மணிவண்ணனிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் சென்னையிலிருந்து அவரை வரவைத்து திட்டமிட்டு அவரது நகையை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மணிவண்ணன் உறையூர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் கவிதா மற்றும் அவரது மகன் பாலாஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.