Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள பிரச்சனையை தீர்க்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

0

'- Advertisement -

 

Ad banner

அரசுஉதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களின்
சம்பள பிரச்சனையை களைய வேண்டும்

முதலமைச்சருக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் சு. குணசேகரன், பொதுச் செயலாளர் வி.எஸ். முத்து ராமசாமி,மாநில பொருளாளர் சே. நீலகண்டன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறையாக ஐ.எப்.ஹெச். ஆர். எம்.எஸ். ல் மாதம் தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், நிதியுதவி பெறும் பள்ளி
ஆசிரியர்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் மாத ஊதியம் வழங்குவதில்
பிரச்சனை எழுந்துள்ளது. அரசிடம் நிதியில்லை என்று செய்திகள் பரவி வருகின்றன, இது
ஆசிரியர்களிடையே மிகவும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாத ஊதியத்தை நம்பியே வீட்டுக்கடன், வாகனக்கடன், கூட்டுறவு சங்கங்களில்
பெற்றுள்ள தனிநபர்ககடன் உள்ளிட்டவைகளுக்கு மாதத்தவணை செலுத்த
வேண்டியுள்ளது. மேலும் அடிப்படை தேவைகளுக்கும் ஊதியத்தை நம்பியே ஆசிரியர்கள்
உள்ளனர். ஊதியம் அளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் உதவிபெறும் பள்ளிகளில்
பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனையை களைந்து வழக்கம்போல்
மாதந்தோறும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.