Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி தலைமையிலான ஆட்சியை வரவேற்க மக்கள் தயார் ஆகிவிட்டனர்.கரட்டாம்பட்டி வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி.

0

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த தகுதியான ஒரே கட்சி அதிமுக தான். முன்னாள் அமைச்சர் சிவபதி பேச்சு .

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கரட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் திடலில் , இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் தமிழுக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மாணவரணி மாவட்ட செயலாளரும் , திருப்பைஞீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான அறிவழகன் தலைமை வகித்தார். முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம்,மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் ,ஆகியோர் முன்னிலை மாணவரணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் , எம்ஜிஆர் இளைஞரணி செயலாளருமான சிவபதி பேசுகையில்,

“மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்துவதற்கு அதிமுகவிற்கு மட்டும் தான் தகுதி உள்ளது. மொழிப் போரில் உயிர் நீத்த தியாகி சின்னச்சாமிக்கு மணிமண்டபம் கட்டியதும், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளித்ததும் அதிமுக அரசு தான் .அதே போல இன்று தியாகி முத்து, தாளமுத்துநடராசன், அய்யம்பாளையம் செல்வராஜ் போன்ற தியாகிகள் தமிழுக்காக தமிழுக்காக இன்று மாய்த்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூறும் வகையில் இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ், தமிழ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிற ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது திமுகதான். மக்கள் சார்ந்த திட்டங்களை விளக்காமல் , தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மட்டும் ஸ்டாலின் அரசு கவனம் செலுத்துகிறது. விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், நீட் தேர்வு ரத்து என திமுக அரசு தனது 520 தேர்தல் வாக்குறுதிகளில் எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் , மக்களிடம் பொய் சொல்லி திமுக ஆட்சி நடத்தி வருகிறது. தற்போதைய திமுக அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4 வருடங்கள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்த எடப்பாடியார் தலைமையிலான ஜெயலலிதாவை வரவேற்க மக்கள் தயாராகி விட்டனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன் , சட்டமன்ற தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவது நிச்சயம்” இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, அண்ணாவி, முன்னாள் எம்எல்ஏக்கள் பிரின்ஸ் தங்கவேல், மல்லிகா சின்னச்சாமி, இந்திரா காந்தி, செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர் சாரதா உள்ளிட்டோர் பேசினர். மேலும் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் அறிவழகன் விஜய், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் துரைராஜ் மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சந்திரமோகன் ,மாவட்ட பிரதிநிதி மருதமுத்து ,ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், ஜெயக்குமார் , ஆதாளி, வெங்கட்ராஜ், சேனை செல்வம், சேனை செல்வம் , ஒன்றிய கழக அவைத் தலைவர் கல்லடிப்பட்டி கோவிந்தராஜ், துறையூர் நகர செயலாளர் அமைதி பாலு , முசிறி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆம்பூர் எம் சுரேஷ் ராஜா,
பூக்கடை குரு , சொரத்தூர் ரமேஷ், ஆதனூர் செல்வராஜ் ,பேரூர் செயலாளர்கள் துரை.சக்திவேல், சம்பத்குமார், ராஜாங்கம், ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் சேர்மன் மைவிழி அன்பரசு மற்றும் மாவட்ட ஒன்றிய , நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , முன்னாள் ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் கரட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பால்ராஜ் , ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.