திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் சிக்கிய இலங்கை பெண்.

திருச்சி விமான நிலையத்தில் இலங்கைக்கு செல்லும் பயணிகளை இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது பெண் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அந்த பாஸ்போர்ட் இலங்கை குடியுரிமை பெற்றத்தை மறைத்து இந்திய பாஸ்போர்டை பெற்றது தெரிய வந்தது.
மேலும் அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் நாமக்கல் மாவட்டம் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஏர்போர்ட் போலீசில் இமிகிரேஷன் அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.