Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிரத்யோக தயாரிப்புகளுடன் பிர்லா ஒப்ஸ் தனது புதிய கிளையை தொடங்கியது .

0

'- Advertisement -

 

திருச்சி கருமண்டபத்தில் முதல் கிளையை தனது பிரத்யோக தயாரிப்பவர்களுடன் தொடங்கியது பிர்லா ஓபஸ் நிறுவனம்

இளம் தொழில் முனைவோருக்கு சொந்தமான புதிய கிளை திருச்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது

ஆதித்யா பிர்லா குழுமம் 80 ஆயிரம் கோடி ரூபாயில் இந்திய அலங்கார வண்ணபூச்சுக்கள் சந்தையில் “பிர்லா ஓபஸ்” என்ற பெயரில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் முதலீடு செய்து உள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயில் நாடு முழுவதும் ஆறு உற்பத்தி நிறுவனங்களை நிறுவுவது எக்கோலாக பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது.

Suresh

இந்தியாவின் முன்னணி பெயிண்ட் பிராண்டுகளில் ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ள பிர்லா ஓபஸ், 145 க்கும் அதிகமான தயாரிப்புகளோடு, 1200க்கும் அதிகமான SKU க்கல், நீர் சார்ந்த வண்ணபூச்சுகள், பர்சிப்பிகள், மர பூச்சுகள் மற்றும் வால்பேப்பர்கல் என 2300 க்கும் அதிகமான வண்ணமயமான தேர்வுகளுடன் விரிவு படுத்துகிறது.

நேற்று பிர்லா ஓபஸ் நிறுவனம் திருச்சியில் தனது முதல் கிளை திறப்பு விழா உடன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளது. பிர்லா ஓபஸ் தயாரிப்புகளுக்கு பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஸ்டோர், பிராண்டின் பலதரப்பட்ட தேவைகளுக்கான விரிவான இடமாக இந்த கிளை விளங்கும். இப்பகுதியில் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், கொண்டாடும் வகையிலும் வண்ணங்களின் எண்ணிக்கை அமைந்திருக்கும். ஒரு இளம் தொழில் முனைவோரின் உரிமையாளது புதுமை மற்றும் இலட்சியத்தின் தொடுதலை சேர்க்கும் வகையில், உள்ளூர் மக்களின் சமூகத்தின் உணர்வோடு எதிரொலிக்கிறது.

வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தும் வகையில் இந்த கிளை ஒரு சிறந்த அனுபவத்தலமாக அமையும். இதில் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று பார்க்கவும், தொடுதல் உணர்வும், நிழல் தளத்தை பார்த்து பயன்பெறும் வகையிலும், நிபுணர்களுடன் நேரடியாக கலந்தாலோசித்து தங்கள் வண்ணங்கள் மற்றும் தயாரிப்புகளை தேர்வு செய்ய முடியும்.

பிர்லா ஓபஸ் பிரான்சைஸ் கிளையின் உரிமையாளர் சாம்சன் சிரில் பாஸ்கர் கூறுகையில்:-
இந்தியாவில் பிர்லா ஓபஸ் இன் முதல் உரிமக் கிளையை அதன் செழுமையான கலாச்சாரம், பாரம்பரிய, மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான திருச்சிக்கு கொண்டு வர இளம் தொழில் முனைவோராக கிடைத்த இந்த வாய்ப்பை பெற்றதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். இந்த திறப்பு விழா ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது என்று கூறிய அவர், இது பிர்லா ஓபஸ் க்கான பிரத்தியேக ஸ்டோர் என்பதால், பிர்லா ஓபஸ் பிரிவுகளில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களில் பல்வேறு வகையான நடைமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார். திருச்சி மக்கள், இனி தங்கள் வீடுகளில் உயர்தரமான, வண்ணமயமான இடங்களை உருவாக்கலாம். இந்த கடை திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாடிக்கையாளர்களுக்காகவும், வர்த்தகர்களுக்காகவும் திறக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அனைத்து வார நாட்களிலும் சலுகைகளை பெற வாடிக்கையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என கூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.