Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துணிவு,வாரிசு படங்கள் ரிலீஸ்.திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

0

'- Advertisement -

திருச்சி திரையரங்குகளில் அஜித்,
விஜய் படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்.

Ad banner

அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியானதையொட்டி,
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

(திருவானைக்கோயில் வெங்கடேஸ்வரா திரையரங்கம் முன் தன்னை தானே செதுக்கியவர் அஜித் நற்பணி இயக்கம்  சார்பில் வைக்கப்பட்டு இருந்த100 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்)

 

அஜித் நடித்த துணிவு விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளன.
துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் வெளியாகின.
தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படங்களை காண, ரசிகர்கள் முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு முதலே திரையரங்கில் காத்துக் கிடந்ததாக தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் திருச்சியிலும் நள்ளிரவு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 1 மணிக்கு வெளியான துணிவு திரைப்படத்தை காண இரவு 8 மணி முதலே ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்.
கட்டுக்கடங்காத வகையில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதை அடுத்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

 

ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வானவெடிக்கை வைத்து குணம் திரைப்படம் காண சென்றனர்.

அதிகாலை 4 மணிக்கு வெளியான வாரிசு படத்தை காண ஒரு மணி முதலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.