Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரெட்டமலை கருப்பு கோவிலில் அன்னதான திட்ட தொடக்க விழா.

0

திருச்சி ரெட்டைமலை ஒண்டிக் கருப்புசாமி
கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்.

திருச்சியில் ரெட்டைமலை ஒண்டிக் கருப்புசாமி கோயிலில் அன்னதான திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் மதிய வேளையில் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்பேரில் ஒவ்வொரு கோயிலிலிலும் குறைந்தது 25 பேர் முதல் அதிகபட்சம் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி பிராட்டியூர் ரெட்டைமலை ஒண்டிக் கருப்பண்ணசுவாமி கோயிலில் அன்னதான திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராசு அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி, 4 ஆவது மண்டலக்குழு தலைவர் துர்காதேவி, 56 ஆவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா, உதவி ஆணையர் லெட்சுமணன், உதவி கோட்ட பொறியாளர் கௌதம், கோயில் தக்கார் தெய்வேந்திரன், செயல் அலுவலர்கள் பொன் மாரிமுத்து, முத்துராஜ், விஜயராகவன், கார்த்திகா, தொழிலதிபர் ஜோதி மகாலிங்கம், கோயில் பூசாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோயிலில் உள்ள விநாயகர், மலைக்காளியம்மன், ஒண்டி கருப்பண்ணசுவாமி, மாசி பெரியண்ணசுவாமி, நீலமேகசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Leave A Reply

Your email address will not be published.