திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி சார்பில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவப் பயிற்சி
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் உன்னத் பாரத் இயக்கம் 2.0 சார்பாக இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவப் பயிற்சி நாகமங்கலம் மூலிகை தோட்டத்தில் .

இப்பயிற்சியில் 46 பேர் கலந்து கொண்டார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரித்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும் முழுமையான நலவாழ்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிற்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் பசுமை நலவாழ்வு மூலிகை மருத்துவம் பற்றியும் பாரம்பரிய இந்திய மருத்துவ வகைகள் பற்றியும் வாதம்,பித்தம், கபம் வேறுபாடுகள் தொற்று நோய்கள் வராமல் இருக்க முன்தடுப்பு முறைகள்,உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துதல் ஆகியவை பற்றி கூறினார்.
மேலும் அவரது பயிற்சியில் மக்கள் மூலிகை பொருட்களை பாரம்பரிய முறையில் அம்மி, உரல், உலக்கை மற்றும் கல்வத்தில் அரைத்து பொடி செய்தும் விறகு அடுப்பபை பயன்படுத்தியும் திரிபால சூரணம், திரிகடுகு சூரணம், அமுக்கரா சூரணம், குமரி லேகியம், மின்சார தைலம், பிண்ட தைலம் ஆகியற்றை செய்து டப்பாவில் அடைத்தனர் .
மேலும் சாஸ்திரா பல்கலைகழகத்தின் சித்த மருத்துவர் ராஜலெட்சுமி அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பயன் படுத்தும் மூலிகை பற்றியும் நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் செரிக்க கூடிய உணவு பற்றியும், பருவக்காலங்களில் உடலில் ஏற்படும் உபாதைகள் அவற்றை எவ்வாறு சரி செய்வது பற்றி எடுத்துக்கூறினார்.
நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தற்பொழுதுள்ள பரவுகின்ற தொற்று நோய்களுக்கு இதுபோல உள்ள பயிற்சி எம் மக்களுக்கு தேவை என்றும் அதை கற்றுக்கொண்டு பிற மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று கூறினார் .
இப்பயிற்சியின் முடிவில் செப்பர்டு விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.
விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா வந்தவர்களை வரவேற்றார் முடிவில் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார் .
பொருளியல் துறை மாணவர்கள் சதீஷ் மற்றும் தனுஷ் இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்திருந்தனர்.

