Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலியை கைவிட சொன்ன மனைவிக்கு உருட்டு கட்டை அடி. கணவர் கைது.

0

'- Advertisement -

கள்ளக்காதலி தொடர்பை கைவிட சொன்ன மனைவியை தாக்கி கணவர் கொலை மிரட்டல்.

Ad banner

திருச்சி பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விஜயலட்சுமி ( வயது 27) என்பவரை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2021ல் அவரை திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் இருவரும் சந்தோஷமாக குடும்ப நடத்தி வந்தனர். இந்த நிலையில் சசிக்குமாருக்கு நான்சி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து சசிகுமார் மனைவியை தவிக்க விட்டு கடந்த ஜூலை மாதம் கள்ளக் காதலியுடன் ஓட்டம் பிடித்தார்.

பின்னர் வேறு பகுதியில் சசிகுமார் நான்சியுடன் குடும்ப நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் தனது கணவர் சசிகுமார் மற்றும் கள்ளக்காதலியை எதைச்சையாக விஜயலட்சுமி பார்த்தார்.
அப்போது கணவரை கண்டித்த அவர் கள்ளக் காதலியை விட்டுவிட்டு தன்னுடன் வருமாறு அழைத்தார். இதற்கு சசிக்குமார் ஒப்புக் கொள்ள மறுத்தார். இதை எடுத்து கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஆத்திரமடைந்த சசிக்குமார் காதல் மனைவியை மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.பின்னர் இருவரும் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக விஜயலட்சுமி திருவரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

தலைமறைவான கள்ளக்காதலி நான்சியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.