Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி 20 வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர். 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி.

0

'- Advertisement -

இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு பிக்பாஷ் லீக் சமீபத்தில் தொடங்கியது. இத்தொடரில் நேற்று 5-வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் – அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டி செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.

Ad banner

இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வந்தவர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடிலெய்டு அணியின் அபார பந்து வீச்சால் சிட்னி வீரர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் 5.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிட்னி டாண்டர்ஸ் அணி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. இதன் மூலம் சிட்னியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு அபார வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 15 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு அணியின் குறைந்தபட்ச ரன் இதுவாகும்.

சிறப்பாக பந்து வீசிய அடிலெய்டு அணியின் ஹெந்த்ரி 2.5 ஓவரில் 1 மேடன் கூடுதலாக 3 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஸ் அஹர் 2 ஓவர் வீசி 6 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேதிவ் ஷார்ட் 1 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். சிட்னி தண்டர்ஸ் 5.5 ஓவரில் 15 ரன்களுக்கு ஆல் அவுட் வீரர்களின் ரன் விவரம்:-

அலெக்ஸ் ஹெய்ல்ஸ் – 0 (2) மேதிவ் ஹில்கெஸ் – 0 (2) ரிலி ரொசவ் – 3 (5) ஜெசன் சங்கா – 0 (2) அலெக்ஸ் ரோஸ் – 2 (4) டெனியல் சாம்ஸ் – 1 (3) ஒலியல் டேவிஸ் – 1 (4) கிரிஸ் கிரீன் – 0 (6) குரிந்தர் சந்து – 0 (6) பிரண்ட் டக்கட் – 4 (2) பரூகி – 1 (2) நாட் அவுட் எக்ஸ்ட்ரா – 3 (ரன்கள்) மொத்த ரன் – 15 (5.5 ஓவர்கள்)

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.