Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விஜய் ஹசாரே டிராபி: கால் இறுதி போட்டியில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்.

0

'- Advertisement -

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மராட்டிய அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. அதன்படி மராட்டிய அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 (10 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள்) ரன்கள் குவித்தார். இவர் கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

Ad banner

இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்து உள்ளார்.

இரண்டாவதாக உத்தர பிரதேச அணி 272 எடுத்து ஆட்டம் இழந்தது. 58ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்று புதன்கிழமை நடைபெற உள்ள அரை இறுதி போட்டியில் அசாம் அணியுடன் மோத உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.