Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை ஹோலி ரெடிமர்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு.

0

'- Advertisement -

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு மியூசிக் பால் என்றும் போட்டி நடைபெற்றது

Ad banner

இந்த போட்டியில் முதலாம் பரிசு மாணவி தாரணி ஸ்ரீ-க்கும் இரண்டாம் பரிசு மாணவர் ரோகித் யாதவ்-க்கும் மூன்றாம் பரிசு மாணவர் அமிர்த சாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மூத்த ஆசிரியர் சித்ரா தேவி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு குழந்தைகள் தின நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.