Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி .

0

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஆனது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி பிங்க் அக்டோபர் மாதம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாதம் முழுவதும் நடத்தி வருகிறது.

அதேபோல் இவ்வாண்டும் திருச்சி ஹர்ஷமித்ரா பல்நோக்கு மருத்துவமனை தமிழக அரசின் மக்களைத் தேடி என்ற மருத்துவ முகாம் போல ஹர்ஷமித்ரா மருத்துவர்கள் அடங்கிய குழுவானது தெர்மோகிராம் எனப்படும் ரூ 3500 மதிப்புள்ள மார்பக ஸ்கேன் பரிசோதனைகளை ரூபாய் 500க்கு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் ,மக்கள் கூடும் இடங்கள் ,அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹர்ஷமித்ரா மருத்துவமனையும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியும் இணைந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை திருச்சி தெற்கு டிஎஸ்பி ஸ்ரீதேவி, பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரியின் முதல்வர் செந்தாமரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலையில் தொடங்கிய பேரணி ஜென்னிஸ் ஹோட்டல் வழியாக திருச்சி ரயில் நிலைய ரவுண்டானா மற்றும் மிளகு பாறை வழியாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது பேரணியில் பங்கேற்ற ஹர்ஷமித்ரா மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.