Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனுமதி இன்றி பட்டாசு விற்ற, வெடித்த 14 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில்
அனுமதி இன்றி பட்டாசு விற்ற,வெடித்த 14 பேர் கைது .

Ad banner
TVK ad

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதியின்றி
பட்டாசு விற்ற ஸ்ரீவரங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 20) பிரகாஷ் (வயது 21), இபி ரோடு பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 48) காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த முகமது சாகிப் ( வயது 36) தர்பார் மேடு பகுதியை சேர்ந்த ஜாபர் சையது (வயது 52)ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை ஜாமினில் உடனடியாக விடுதலை செய்தனர்.

இதேபோன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்நிலையில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று விதிமுறை விதித்துருந்தனர்.
இந்த விதிமுறையை மீறியதாக காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (வயது 32) பாலக்கரை பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் நிதிஷ்குமார் (வயது 31)ஆனந்தகுமார் (வயது 21) தாமஸ் அந்தோணி (வயது 22) கோவிந்தராஜ் (வயது 30)கணேஷ் (வயது 31) செந்தில்குமரன் (வயது 20) உறையூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு இவர்களை சொந்த ஜாமினில் உடனடியாக விடுதலை செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.