Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளராக தந்தை பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் குணசேகரன் நியமனம்.

0

திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளராக தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் நியமனம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ஆலோசனைபடியும் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட கிளையின் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர் பரிந்துரையின் படியும் திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளராக தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியரான முனைவர் குணசேகரன் அவர்கள் தமிழ்நாடு ஆளுநரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ் மாநில கிளையின் மூலம் நியமனம் செய்யப்பட்டார்.

அதற்கான ஆணையை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் குணசேகரன் அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாச ராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட கிளையின் தலைவரும் இந்திரா கணேசன் கல்விக்குழுமத்தின் செயலாளருமான இன்ஜினியர் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.