Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இருள் நீங்கி எங்களுக்கு விடியல் கிடைக்குமா ? பொதுமக்கள் புலம்பல்.

0

'- Advertisement -

Ad banner

இருள் நீங்கி, விடியல் கிடைக்குமா?.பொதுமக்கள் எதிர்பார

திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த 3.6.22 முதல் சுங்கம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கல்லக்குடி எல்லையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

கல்லக்குடி எல்லைக்குட்பட்ட புறவழி சாலை முழுவதும், ராஜா தியேட்டர் பேருந்து நிறுத்தம், மால்வாய் ரோடு பேருந்து நிறுத்தம மற்றும் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலைகள் மின்விளக்குகள் மின் இணைப்பு தரப்படாமல் கும்மிருட்டில் மூழ்கியுள்ளன.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மாலை நேரங்கலிலேயே இருளில் மூழ்கி நடுஇரவு போல் பாதுகாப்பு இன்றி காணப்படுகின்றன.இப்பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும், இது மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.இதனால் அப் பகுதி பொதுமக்கள் மாலை நேரங்களில் வெளியில் வரவே தயங்கி வருகின்றனர்.

வசூல் செய்கின்ற சுங்கத்திற்கும், வாங்குகின்ற ஊதியத்திற்கும் அரசு துறைகள், அதிகாரிகள் சற்றேனும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். என அப்பொழுது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

பகுதி பொதுமக்கள் எப்போது இருள் நீங்கி எப்போது எங்களுக்கு விடியல் கிடைக்கும் என புலம்பி வருகின்றனர்.

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.