Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.தமிழக வீரர்கள் அபாரம்.

0

'- Advertisement -

Ad banner

சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேபாளம் நாட்டில் உள்ள காத்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 தொடர் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று கோப்பையை பெற்றது.

இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த செய்யது ஷா அஜிஸ் பெற்றார்.

சிறந்த பந்துவீச்சாளர் விருதை தமிழகத்தை சேர்ந்த மணிவண்ணன் பெற்றார். சிறந்த பீல்டருக்கான விருதை தமிழகத்தை சேர்ந்த சாகுல்ஹமீதுக்கு கிடைத்தது. வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை தமிழகத்தை சேர்ந்த

சந்தோஷ்குமார் பெற்றார்.

மேலும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த தொடரின் பரிசளிப்பு விழாவை இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கமும், சர்வதேச வீல்சேர் கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்தியது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு நேபாள சர்வதேச வீல்சேர் கிரிக்கெட் சங்க தலைவர் சுதீன் சர்பால் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.