இன்றைய (20-04-2022) ராசி பலன்கள்
மேஷம்
வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி காலதாமதமாக கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது தேவையற்ற மனக்கசப்புகளை குறைக்கும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : தற்பெருமையை குறைத்துக் கொள்ளவும்.
—————————————
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
—————————————
மிதுனம்
தாயாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.
திருவாதிரை : மதிப்பு மேம்படும்.
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
கடகம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் சில விஷயங்களில் பிடிவாதத்துடன் செயல்படுவார்கள். புதிய உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். திட்டமிட்ட சில பணிகளில் அலைச்சலுக்கு பின் ஆதாயம் உண்டாகும். அமைதியான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
—————————————
சிம்மம்
தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரம் : நம்பிக்கை ஏற்படும்.
உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
—————————————
கன்னி
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————
துலாம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தையின் தேவையை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். வாழ்க்கை துணையின் உதவியால் பொருட்சேர்க்கை உண்டாகும். மேன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்
சுவாதி : முதலீடுகள் மேம்படும்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————
விருச்சிகம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : நெருக்கடியான நாள்.
அனுஷம் : சோர்வு உண்டாகும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
—————————————
தனுசு
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். ஆதாயகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் : லாபம் மேம்படும்.
—————————————
மகரம்
உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : தாமதங்கள் நீங்கும்.
திருவோணம் : இன்னல்கள் குறையும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.
—————————————
கும்பம்
புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அனுபவம் மேம்படும்.
சதயம் : எதிர்ப்புகள் விலகும்.
பூரட்டாதி : கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
————————————–
மீனம்
உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.
—————————————