வரகனேரி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது
திருச்சி மாவட்டம் வரகனேரியில் எழுந்தருளியுள்ள பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று(திங்கள் கிழமை) காலை 6.00 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் குருபூஜை தொடங்கியது. காலை 9.30 மணிக்கு ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளுக்கு அபிஷேகமும், காலை 11.00 மணிக்கு மகா அன்னதானமும் நடைபெற்றது.
இன்று மாலை 6.30 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 12.00 மணிக்கு மகா அன்னதானமும் நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், நடைபெறும். தொடர்ந்து
புதன்கிழமை காலை 9.00 மணிக்கு “திருவடி தரிசனம்” நடைபெறும். மதியம் 12.00 மணிக்கு அன்னதானம்
நடைபெறும். மாலை 6.30 மணிக்கு வீணை இசை கச்சேரியும், இரவு 7.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், தொடர்ந்து நாட்டியாஞ்சலியும் நடைபெற உள்ளது.
இந்த குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வரகனேரி பொதுமக்களும் சிறப்பாக செய்துள்ளனர்.