அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதி.ம.நீ.ம.வழக்கறிஞர் கிஷோர் குமார்
லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
திருச்சி மாவட்டம் லால்குடியை சுற்றியுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் திருச்சி லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனையை நம்பி தினம்தோறும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் மேற்படி அதிமுக்கியத்துவம் நிறைந்த இந்த மருத்துவமனையில் இ.என்.டி.பிரிவுவில் தற்பொழுது ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். இதற்கு முன்பு இதே இ.என்.டி பிரிவில் மூன்று மருத்துவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் லால்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மேலும் எலும்பு முறிவு, தோல் மற்றும் கண் சிகிச்சை மருத்துவ பணியிடங்கள் வெகுநாட்களாக காலியாகவே உள்ளது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக லால்குடி அரசு மருத்துவமனையில் “எக்ஸ்ரே வசதியிருந்தும்” போதிய பணியாளர்கள் இல்லாததால், எக்ஸ்ரே இயந்திரம் காட்சி பொருளாகவே உள்ளது என்பது வேதனை.
மேலும் லால்குடி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தின் நிலையும் மிக மோசமாக உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடன் வாங்கி, தங்களது நகைகளை அடகு வைத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டிய துர்பாக்கிய சூழல் உள்ளது.
இதனையெல்லாம் சரிசெய்வார் என நம்பி மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினரும் ஏழை, எளிய மக்கள் படும் இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை அவருக்கு என்று தனியாக மருத்துவமனையையே நடத்துகின்றார்.
எனவே சுகாதாரத்துறை அமைச்சர் , செயலாளர் திருச்சி அரசு பொதுமருத்துவமனை டீன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பணி அமர்த்தி லால்குடி பகுதி மக்களுக்கு உயர்ந்த சிகிச்சையளிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம். (லால்குடி திமுக முதன்மைச் செயலாளரும் உள்ளாட்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)
என மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.