திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல்.
வட மாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா என ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது எஸ் 12பெட்டியில் போலீசார் நடத்திய சோதனையில் உரிமை கோரப்படாத பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது.
அதை சோதனையிட்டு பார்த்தபோது அதில் ரூ 39ஆயிரம் மதிப்புள்ள பான்பராக்,குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதைக் கொண்டு வந்த மர்ம ஆசாமி நைசாக நழுவி தப்பி ஓடிவிட்டான்.
இதை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.