திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில்
அடையாள ஸ்டிக்கர் ஒட்டி நூதன
முறையில் கொள்ளையடித்து சென்ற
மர்மநபர்களுக்கு போலீசார் வலை.
மிளகுபாறையை அடுத்துள்ள
பொன்நகர் – நியூ செல்வா நகர்
பகுதியை சேர்ந்த லட்சுமணன்,
தொடர் விடுமுறை காரணமாக
குடும்பத்துடன் கடந்த 8 ஆம் தேதி
பெங்களூருக்கு சென்ற நிலையில்
நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின்
பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை
பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்
உள்ளே சென்று பார்த்தபோது
பீரோவில் இருந்த 13 பவுன் தங்க
நகை, லேப்டாப், வெள்ளி குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருள்கள்
திருடு போயிருந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் விசாரணை நடத்தி
வரும் போலீசார்,
வீட்டில் ஆள்
இருக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள ஸ்டிக்கர் ஒட்டி நூதன
முறையில் கொள்ளையில் ஈடுபடும்
கும்பலை போலீசார் தேடி
வருகின்றனர்.