திருச்சி சின்னக்கடை வீதியில்.
லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை.
திருச்சி சின்ன கடை வீதி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கணேசன் ( வயது 37) இவர் தனியார் பார்சல் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.
கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற கணேசன், மன அழுத்தத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்