திருச்சியில் 5வயது பெண்குழந்தையுடன் தாய் திடீர் மாயம்.
மேலும் 3 பெண்கள் மாயமானதால் பரபரப்பு.
திருவரங்கம் அம்மாமண்டபம் ரோடு புது தெருவை சேர்ந்தவர் குமார் .இவரது மனைவி பிரியா (வயது 24). இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் பிரதிக்ஷா (வயது 5).இந்த குழந்தை திருவானைக்காவல் பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறது. நேற்று குழந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்வதாக தறிவிட்டு சென்றார். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் குமார் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து குழந்தை மற்றும் தாயை தேடி வருகின்றனர்.
மேலும் புதுக்கோட்டை நம்பன் பட்டியைச் சேர்ந்தவர் செல்லாண்டி .
இவரது மகள் ஸ்ரீரம்யா. (வயது 15) லால்குடி நடு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் .இவரது மகள் தேவதர்ஷினி (வயது 17).அவர்கள் இருவரும் ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கிபடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் காணவில்லை. இதுகுறித்து அசிரம சூப்பர்வைசர் உமா கொடுத்த புகாரின் பெயரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி பீமநகரைசேர்ந்த சாமுவேல் என்பவரது மனைவி செல்வி என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் செஷன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் தொடர்ந்து 4 பெண்கள் மாயமானதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.