திருச்சி பெரிய கடை வீதியில்
லாட்டரி விற்றவர் கைது.
பணம், செல்போன்கள் பறிமுதல்.
திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் திருச்சி பெரிய கடைவீதி சந்து கடை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டடு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றதாக முகமது ஜாகீர்கான் என்ற வாலிபரை போலிசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து பணம், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.