திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில்
பள்ளி துப்புரவு தொழிலாளி தூக்கு போட்டு சாவு.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். (வயது 48) இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பராசக்தி (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பராசக்தி நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த சக்திவேல் வீட்டு உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பராசக்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.