Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக 15வது பொதுத் தேர்தல். .விருப்ப மனு அளிக்க கட்சியினருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யமொழி அழைப்பு.

0

தி.மு.க 15வது பொதுத் தேர்தல் !

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பகுதி,நகர, பேரூர் கழகங்களில் வார்டு தேர்தல் !

மாவட்ட பொறுப்பாளர் – அமைச்சர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !

திமுக 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தில் பகுதி நகராட்சி பேரூராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை விடுத்துள்ளார் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு !

திமுகவின் 15வது பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் ஊரக கிளைக் கழக தேர்தல்கள் நடந்து முடிந்ததன் தொடர்ச்சியாக பகுதி, நகராட்சி, பேரூராட்சி உட்பட்ட வார்டுகளுக்கு, தேர்தல் வரும் 2022 ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28 தேதி வரை நடைபெறள்ளது.

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மலைக்கோட்டை பகுதி, பாலக்கரை பகுதி, மார்க்கெட் பகுதி, கலைஞர் நகர் பகுதி, பொன்மலை பகுதி, காட்டூர் பகுதி, துவாக்குடி நகரம், மணப்பாறை நகரம், கூத்தைப்பார் பேரூர், பொன்னம்பட்டி பேரூர் ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

அவைத் தலைவருக்கு போட்டியிட ரூபாய் 100, செயலாளருக்கு ரூபாய் 100, துணைச் செயலாளர்கள் இருவர் ஒருவர் மகளிர் மற்றொருவர் ஆண் ரூபாய் 100, பொருளாளர் ரூபாய் 100, செயற்குழு உறுப்பினர் ரூபாய் 20 கட்டணமாக அந்தந்த பகுதிக்குரிய வட்ட திமுக போட்டியிடுவோர். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விண்ணப்ப தாள் ஒன்றுக்கு ரூபாய் 25 வீதம் செலுத்தி பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வேட்புமனுக்களை விண்ணப்ப கட்டணத்துடன் தலைமை கழக பிரதிநிதிகளிடம் தாக்கல் செய்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.