திருச்சி
உறையூர் மீன் மார்கெட்டில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் காசிவிளங்கி மீன் மார்கெட்டில் தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாள்தோறும் சுகாதாரப்பணிகள், துப்புரவு பணிகள் தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீர்கள் தேங்கி நிற்பதையும் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.
கடை வைத்துள்ளவர்கள் பொது மக்களுக்கு இறச்சிகளை விற்பனை செய்யும்போது கடைவைத்துள்ள இடத்தை சுத்தமாக வைத்துக்கொண்டு விற்பனை செய்யவேண்டும் என்றும். மேலும் இடையூறு இல்லாமல் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டுமெனவும்,
தினசரி மார்கெட் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாரும் மற்றும் சுகாதாரக் கேடு ஏற்படா வண்ணம் அதனை சுற்றி கழிவுகளை உடனுக்குடன் அப்புப்றபடுத்த வேண்டும் என சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
இப்பகுதியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் முக்கிய பணியாகும் என்றும் மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் சிவபாதம், உதவிஆணையர் செல்வபாலாஜி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.