மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க புறப்பட்டார் கள்ளழகர்.
நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருளினார்.
இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த சேவை நடைபெற்றது.
தற்பொழுது சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோலத்தில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பாடாகி கள்ளழகர், வைகை ஆற்றில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள உள்ளார்.
பிற்பகலில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.